Showing posts with label நண்பர்களுடன் சமூகசேவை. Show all posts
Showing posts with label நண்பர்களுடன் சமூகசேவை. Show all posts

Monday, June 10, 2013

கல்விக்கு உதவி வேண்டி பணிவான வேண்டுகோள்

கல்விக்கு உதவி வேண்டி பணிவான வேண்டுகோள்
 
அன்பான நண்பர்களுக்கு / வாசகர்களுக்கு:

தமிழ் வலையுலக நண்பர்கள் / வாசகர்கள் ஆதரவோடு, கௌசல்யா என்ற ஏழை மாணவி மருத்துவக் கல்வியை முடித்து, இன்று டாக்டர் கௌசல்யாவாக உருவாகியிருப்பது, மிக்க பெருமையான ஒரு விஷயம். விவரங்கள்  இங்கே காணக் கிடைக்கும்.

http://balaji_ammu.blogspot.in/2006/09/blog-post.html
http://balaji_ammu.blogspot.in/2006/09/kausalya.html
http://balaji_ammu.blogspot.in/2010/08/565.html

அது தவிர, இன்னும் சிலபல சமூக உதவி சார் முயற்சிகளுக்கும், உங்களில் பலர் ஆதரவும், ஊக்கமும் அளித்து வந்துள்ளீர்கள். இவை அனைத்துக்கும் என் பணிவான நன்றிகள்.

சமீபத்தில், டாக்டர் கௌசல்யாவின் ஊரில் (அந்தியூர்) பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒரு ஏழை மாணவரின் தந்தையிடமிருந்து அவனது மேற்படிப்புக்கு உதவி கேட்டு ஒரு வேண்டுகோள் வந்துள்ளது. அதையும், மாணவனின் கல்விச் சான்றிதழ்களையும், உங்கள் உதவியை பணிவுடன் நாடி, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.









மிகுந்த சிரமங்களுக்கு இடையில் அயராது உழைத்து, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 481 மதிப்பெண்களும், தற்போது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1147 மதிப்பெண்களும் அம்மாணவன் பெற்றிருக்கிறான். பொறியியல் கல்வி பயில மிக்க ஆர்வமாக இருக்கிறான். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில், 200க்கு 197.5 மதிப்பெண்கள் இருப்பதால், நல்லதொரு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பிருப்பதை உணர்கிறேன்.

பொருளுதவி செய்ய விரும்பும் அன்பர்கள் என்னை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன் அல்லது இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டால் கூட போதுமானது. பிறகு பொருளுதவி செய்வதற்கு வேண்டிய விவரங்களை மின்மடல்வழி தருகிறேன். உங்களால் இயன்றதை அளித்து உதவுங்கள்.

balaji_ammu@yahoo.com

நன்றியுடன்
எ.அ.பாலா

Tuesday, July 24, 2012

செந்தூர்பாண்டி

செந்தூர்பாண்டி



ஒரு சோக நிகழ்வின் தொடர்ச்சியாகத் தான் பாண்டி எனக்கு அறிமுகமானார். அன்பு நண்பர் அந்தோணி 2 ஆண்டுகளுக்கு முன் திடீரென்று காலமானபோது தான். அந்தோணிக்கு தமிழ் வலையுலக நண்பர்கள் உதவியுடன் வாங்கிக் கொடுத்து இருந்த தானியங்கி சக்கர நாற்காலியை என்ன செய்யலாம் என்று யோசித்த போது, அந்தோணிக்குத் தெரிந்த பாண்டிக்கு அதை வழங்க, நண்பர்கள் சம்மதத்துடன் முடிவு செய்தேன். பாண்டி பிறந்து சில ஆண்டுகளிலேயே அவரது கால்கள் செயலிழந்து விட்டன என்று கேள்விப்பட்டேன். சற்றே பழுதடைந்திருந்த சக்கர நாற்காலியை பழுது பார்த்து பாண்டிக்கு கொடுத்தேன். பாண்டிக்கு மிகவும் சந்தோஷம்.

பாண்டியின் கால்கள் செயல் இழந்திருந்தாலும், அவரது கைகளில் அற்புதமான திறமை ஒளிந்திருக்கிறது. மிக நேர்த்தியாக ஓவியங்கள் வரைகிறார்.

அவரது சில ஓவியங்களை சில அன்பர்கள் வாங்கி அவருக்கு பொருளுதவி செய்திருக்கின்றனர் என்று அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கேமராவில் படம் பிடித்த சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.


                               
                                          


அவ்வப்போது, பாண்டிக்கு முடிந்த அளவில் உதவிகள் செய்து வருகிறேன். ஆனால், அவராக எதுவும் என்னிடம் கேட்டதில்லை. கை தொலைபேசி பழுது பார்ப்பதற்குரிய தகுதி கிடைக்கும் (தமிழக அரசு நடத்திய) இலவச பயிற்சி வகுப்பில் பாண்டி சேர்ந்து தேர்ச்சியும் பெற்றார். வீட்டில் இருந்தபடியே சுயவேலை பார்த்து கொஞ்சம் சம்பாதித்து வந்தார். தனது சுய சம்பாத்தியம், கொஞ்சம் கடன் என்று ஒரு சிறு கைதொலைபேசி பழுது பார்க்கும் கடையை தனது வீட்டுக்கு (ரெட் ஹில்ஸ்) அருகில் சமீபத்தில் அமைத்திருக்கிறார். அவரது தன்னம்பிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பாண்டிக்கு ஏதாவது வகையில் உதவ விரும்பினால், அவரை/என்னை தொடர்பு கொள்ளும்படி  வாசக நண்பர்களை வேண்டுகிறேன்.

M.SENTHUR PANDIAN
NO,5/269 VEERAMAMUNIVAR STREET M.A NAGAR STREEET
REDHILLS CH-52
PHONE NO - 9940512774

அவரது வங்கிக்கணக்கு எண்:

M.SENTHUR PANDIAN
INDIAN BANK ACCOUNT NO -977780556
RED HILLS BRANCH


பிகு: பணம் அனுப்பும் நண்பர்கள், விவரங்களை (தொகை, தேதி, பெயர்) balaji_ammu@yahoo.com என்ற முகவரிக்கு தெரிவிக்கவும்.  கணக்கு சரி பார்க்க ஏதுவாக இருக்கும்.  எப்போதும் போல, பணம் அனுப்பும் அன்பர்களுக்கு, வங்கிக் கணக்குக்கு பணம் கிரெடிட் ஆனவுடன், மடலில் தெரிவிக்கிறேன். 


என்றென்றும் அன்புடன்

பாலா

Saturday, April 10, 2010

562. ஒரு நெஞ்சார்ந்த நன்றி (கௌசல்யா), ஒரு அவசர உதவிக்கு வேண்டுகோள்(முத்துராமன்)

அன்பான தமிழ் வலையுலக/வாசக நண்பர்களே,

கௌசல்யா என்ற ஏழை மாணவிக்கு வலைப்பதிவர்களும், என் வலைப்பதிவு வாசகர்களும் மனமுவந்து செய்த பொருளுதவியால், இன்று கௌசல்யா தனது மருத்துவப் படிப்பை (ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில்) முடித்து விட்டார். ஓராண்டு House Surgeoncy. பிறகு Post graduate படிப்புக்கான தேர்வுக்கு வேண்டி பயின்று வருகிறார். உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றியை தலை வணங்கித் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக உதவி முயற்சிகளுக்கு நீங்கள் அளித்து வரும் பேராதரவு தான், எனக்கும் சகபதிவர்/நண்பர் ராம்கிக்கும் மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும், மனநிறைவையும் தருகிறது

கௌசல்யா குறித்த எனது பதிவுகளை இங்கே காணலாம்

நண்பர்களுடன் சமூகசேவை -சமயம் கிடைக்கும்போது இவ்விணைபபில் உள்ள இடுகைகளை வாசிக்கவும்.

அடுத்து, ஒரு தாழ்மையான வேண்டுகோள்!

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

எனக்குக் கிடைத்த தகவலின்படி, இதுவரை சேகரித்த தொகையின் ஒரு பகுதி, அறுவை சிகிச்சை தள்ளிப் போன காரணத்தால், பரிசோதனைகளுக்கும், டயாலிஸிஸுக்கும் செலவாகி விட்டது. இருந்தும், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கைவசமுள்ளது, நம்பிக்கை அளிக்கிறது. மேலும், இரண்டரை லட்சம் தேவை என்பதாலேயே இந்த வேண்டுகோள்.

எழுத்தாளர் பாராவின் மனம் நெகிழவைக்கும் இவ்விடுகையையும் வாசிக்கவும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450
அன்புடன் பாலா - balaji_ammu@yahoo.com

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBIN0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்குப் பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நேரடியாக நீங்கள் முத்துராமனின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புகையில், அது குறித்து விவரங்களை எனக்கு/ராம்கிக்கு மடல் வழி தெரிவித்தால், பணம் வந்து சேர்ந்த தகவலை உங்களுக்கு கன்ஃபர்ம் செய்யவும், சேகரிக்கப்பட்ட தொகையின் கணக்கை சரி பார்க்கவும், தெரிவிக்கவும் உதவியாக இருக்கும்.

தேவையெனில், (மடல்வழி தொடர்பு கொள்ளும் நண்பர்களுக்கு) எனது/ராம்கியின் வங்கிக் கணக்கு விவரங்களை/முகவரியைத் தருகிறேன். இதற்கு முன் உதவி முயற்சிகளுக்கு பணம் அனுப்பிய நண்பர்களிடம் என்/ராம்கியின் வங்கிக் கணக்கு விவரங்கள் இருக்கும். மீண்டும் சிரம் தாழ்த்தி உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம்.

அன்புடன்
பாலா

Monday, August 17, 2009

546. சிங்கை நாதனுக்காக ஒரு வேண்டுகோள்

சக தமிழ் பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று சிங்கை நண்பர் குழலி மின்னஞ்சல் மூலமாக தெரிவித்திருந்தார்.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான / வாசகர்களான உங்களிடமும் நண்பர் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் இந்த வேண்டுகோள். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை (அது எவ்வளவு சிறிதாக இருப்பினும்) அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் செந்திலின் மைத்துனரின் அக்கவுண்டுக்கு அனுப்பலாம். அவரது அக்கவுண்ட் விபரம்

LastName: Sethuraman
FirstName: Siddeswaran
Bank Name: WaMu (Washington Mutual Bank)
Bank Address; 21241 Hawthorne Blvd, Torrance, CA 90503
Bank A/cNo: 9282741060
Routing No: 322271627
A/c Type: Checking A/c

siddeswaran.s@gmail.com
Res No: 001 - 310 - 933- 1543

Paypal details as follows:

e-mail id: rajan.sovi@gmail.com
Then choose the currency
Then choose the reason for transfer- if possible add a note "Senthil's treatment".

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளோம்.

Hi Friends,

This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks
Regards,
Santhi Senthil Nathan.


குறிப்பு 1:


பல நல்ல உள்ளங்கள் ஏன் சிங்கை நாதன் அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க கூடாது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் தற்போதிருக்கும் நிலையில் விமானப் பயணம் மேற்கொள்ள இயலாது. அது ஆம்புலன்ஸ் விமானமாக இருந்தாலும் அதில் பயணிக்க இயலாது. எனவே இந்தியாவிற்கு வந்து சிகிச்சை எடுக்க வாய்ப்பே இல்லாத நிலையில் தான் சிங்கப்பூரில் சிகிச்சையை தொடர்வது என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.


நீங்கள் தருவது எவ்வளவு குறைவாக இருந்தாலும் கொடுங்கள். சிறு துளி பெருவெள்ளம்.


முடிந்தளவு உங்கள் நண்பர்கள் வட்டத்தில் சொல்லி, அவர்கள் தரும் தொகை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கொடுத்து உதவுங்கள்.


தொடர்ந்து உதவுங்கள். உதவும் அத்தனை உள்ளங்களுக்கும் மீண்டும் எங்கள் நன்றிகள்.


குறிப்பு 2:

செந்தில் நாதனின் 5 வயது குழந்தையின் முகத்தில் புன்னகை பூக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. குழந்தைக்கு எங்களது அன்பு.

குறிப்பு 3:

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு :
http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html
http://govikannan.blogspot.com/2009/08/blog-post_13.html
http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_12.html
http://www.narsim.in/2009/08/blog-post_13.html
http://cablesankar.blogspot.com/2009/08/1.html
http://www.nilaraseeganonline.com/2009/08/blog-post_13.html
http://sandanamullai.blogspot.com/2009/08/blog-post_12.html


குறிப்பு 4:

நரசிம் அவருடைய ப்ளாகில் -
33 லட்சத்தை மிக பெரிய தொகையாக பார்க்காமல் அதை 1000 பேரால் வெறும் 3000 ரூபாயாக கொடுக்க முடியும் என்று மிகவும் பாசிடிவாக தனது என்னத்தை வெளி படுத்தி உள்ளார்..

அந்த ஆயிரம் பேரில் நாம் எத்தனை பேர் ?


அனைத்து நண்பர்களுக்கும்:

****************************************
பண உதவி செய்ய விரும்பும், இந்தியாவிலிருக்கும் நண்பர்கள் / வெளிநாட்டிலிருந்து (ரூபாய்) காசோலையாக (அ) என் வங்கிக் கணக்குக்கு Direct credit செய்து உதவ விரும்பும் அன்பர்கள், கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு எழுதலாம்.

balaji_ammu@yahoo.com
rajni_ramki@yahoo.com

இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டாலே போதும். நான் / ராம்கி உங்களுக்கு பணம் அனுப்புவதற்கான விவரங்களை (வங்கி சம்மந்தப்பட்ட மற்றும் எங்கள் முகவரி) தெளிவாக உங்களுக்கு தெரிவிக்கிறோம்.
**********************************

கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக முன்னர் பணம் அனுப்பிய நண்பர்களிடம், எனது மற்றும் ராம்கியின் வங்கிக் கணக்கு தகவல்கள், நான் அப்போது அனுப்பிய மடல்களில் இருக்கும்.

எ.அ.பாலா

Sunday, July 12, 2009

544. மீண்டும் ஒரு ஏழைப்பெண்ணின் கல்விக்கு உதவி வேண்டி

அன்பான வலைப்பதிவுலக நண்பர்களே,

இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!!

2005-இல் பிரமிக்க வைக்கும் கௌசல்யா என்ற என் இடுகையைத் தொடர்ந்து, பல நண்பர்கள் பொருளுதவி செய்தனர். அதன் வாயிலாக கௌசல்யாவின் முதலாண்டு மருத்துவப்படிப்புக்கு உதவ முடிந்தது. தகவல்கள் சென்னைப் பெருமழையும் நெகிழ்ச்சியானதொரு சந்திப்பும் என்ற எனது இடுகையில் காணலாம்.

கௌசல்யாவின் மருத்துவப் படிப்பு முடியும் வரை, அவருக்கு (இயன்ற அளவில்) உதவலாம் என்ற எண்ணத்தில், சில தமிழ் வலையுலக நண்பர்களையும் கலந்தாலோசித்து, தொடர்ந்து அவரது கல்விக்கான உதவி செய்ய, கௌசல்யாவின் கல்விக்கு உதவி வேண்டி ஒரு வேண்டுகோள் இடுகை இட்டேன். இன்னும் பலப்பல நல்ல உள்ளங்கள் செய்த பொருளுதவி, கௌசல்யா படிப்பை முடிக்கும் வரையில் போதும் என்ற வகையில் அமைந்தது ! தற்போது கௌசல்யா ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார். மிகுந்த தன்னம்பிக்கை மிக்க ஒரு பெண்ணாகவும் விளங்குகிறார். இதற்கு, நம் தமிழ் வலைப்பதிவுலகமும் ஒரு காரணம் என்று எண்ணும்போது பெருமையாக இருக்கிறது !

கௌசல்யா குறித்த எனது பதிவுகளை இங்கே காணலாம்

நண்பர்களுடன் சமூகசேவை -சமயம் கிடைக்கும்போது இவ்விணைபபில் உள்ள இடுகைகளை வாசிக்கவும்.

கௌசல்யாவின் சொந்த ஊரான அந்தியூரைச் சேர்ந்த இன்னொரு ஏழை மாணவிவின் பொறியியல் படிப்புக்கு உதவ இயலுமா என்று கௌசல்யா என்னிடம் கேட்டதின் தொடர்ச்சியாக, அப்பெண்ணின் மதிப்பெண் மற்றும் பிற சான்றிதழ்களை அவரிடம் கேட்டுப் பெற்றேன். பானுப்பிரியா என்ற அம்மாணவியின் தந்தை மண்பானை செய்யும் ஒரு தொழிலாளி. அப்பெண் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பதால், நடக்கவிருக்கும் கவுன்சலிங்கில் பொறியியல் படிப்பில் சீட் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால், குடும்பச் சூழல் காரணாமாக, பெண்ணின் தந்தை அவளை மேலே படிக்க வைக்க யோசிப்பதாக கௌசல்யா மூலம் அறியப் பெற்றேன்.

பானுப்பிரியாவின் கல்விச் செலவுக்கு, பண உதவிக்கான இந்த வேண்டுகோளை, உங்கள் முன் மீண்டும் வைக்கிறேன். உங்களால் இயன்ற தொகையை (அது சிறியதாக இருந்தாலும்) உதவியாக அளிக்குமாறு உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். உதவிக் தொகையை (அம்மாணவிக்கு சரியான வகையில் பயனளிக்கும் விதமாக) சேர்ப்பிப்பதற்கு நானும், நண்பர் ரஜினி ராம்கியும் பொறுப்பெடுத்துக் கொள்கிறோம்.

அனைத்து நண்பர்களுக்கும்:
****************************************
பண உதவி செய்ய விரும்பும், இந்தியாவிலிருக்கும் நண்பர்கள் / வெளிநாட்டிலிருந்து (ரூபாய்) காசோலையாக (அ) என் வங்கிக் கணக்குக்கு Direct credit செய்து உதவ விரும்பும் அன்பர்கள், தயவு செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு எழுதவும்.

balaji_ammu@yahoo.com
rajni_ramki@yahoo.com

இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டாலே போதும். நான் / ராம்கி உங்களுக்கு பணம் அனுப்புவதற்கான விவரங்களை (வங்கி சம்மந்தப்பட்ட மற்றும் எங்கள் முகவரி) தெளிவாக உங்களுக்கு தெரிவிக்கிறோம்.
**********************************

கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக முன்னர் பணம் அனுப்பிய நண்பர்களிடம், எனது மற்றும் ராம்கியின் வங்கிக் கணக்கு தகவல்கள், நான் அப்போது அனுப்பிய மடல்களில் இருக்கும். பானுப்பிரியாவின் சான்றிதழ்கள் உங்கள் பார்வைக்கு, கீழே:









பானுப்பிரியாவின் XII மதிப்பெண்களை இத்தளத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம் . இது தகவலுக்காக மட்டும். தவறாக எண்ண வேண்டாம் ! அவரது பதிவு எண் 315000

Friday, August 08, 2008

452. அந்தோணிக்கு சக்கர நாற்காலி கிடைத்து விட்டது!

எனது இந்தப் பதிவில் இட்ட வேண்டுகோளின் தொடர்ச்சியாக நமது தமிழிணைய நல்ல உள்ளங்களின் ஆதரவோடு திரட்டிய தொகையைக் கொண்டு வாங்கிய (பாட்டரியால் இயங்கும்) சக்கர நாற்காலி நேற்று நண்பர் அந்தோணியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தானியங்கி சக்கர நாற்காலியின் வாயிலாக அவரால் தானாகவே வெளியிடங்களுக்குச் சென்று வர இயலும். ஒரு முறை பாட்டரியை சார்ஜ் செய்தால், 7 கி.மீ வரை பிரயாணிக்க இயலும். அந்தோணிக்கு சக்கர நாற்காலி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்பது அவர் என்னிடம் தொலைபேசியதிலிருந்தே தெரிந்தது!

இந்த சமயத்தில் பொருளுதவி செய்த அன்பு நண்பர்களுக்கும், அந்தோணியை வாழ்த்திய அன்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இதற்கு முன்னால், அந்தோணிக்கு நமது கூட்டு முயற்சியின் வாயிலாக ஒரு மடிக்கணினி வாங்கித் தரப்பட்டது. அது தொடர்பான எனது பதிவையும் வாசிக்கவும். இதன் வாயிலாக, அந்தோணி வீட்டிலிருந்தபடியே கணினி சார்ந்த பணி ஒன்றை மேற்கொண்டு (working from home) தன் தேவைகளுக்கு வேண்டிய பணத்தை சம்பாதிக்க முடிகிறது.

உங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் அந்தோணி மென்மேலும் வளர்வதற்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் !

அந்தோணியின் தமிழ் வலையகம் இது

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, April 07, 2008

431. அந்தோணி முத்துவின் வார்த்தைகள் - உள்ளத்திலிருந்து !

என் இனிய கர்ணர்களே,

உங்கள் அன்பினாலும் தயவினாலும் எனக்கு மடிக்கணினி கிடைத்திருக்கிறது.
மனமெல்லாம் சந்தோஷத்தினால் பூத்துக் குலுங்குகிறது.
என் பழைய மேசைக் கணினிக்கும் இதற்கும் மலையளவு வித்தியாசம்.
அது Celeron 800 mhz processor, 128 mb RAM. சமயங்களில் ஆமை கூடத் தோற்று விடும்.

இது Core-2 Duo 1.83 Ghz processor, 2 Mb RAM, DVD Writer, Webcam, மற்றும் நிறைய வசதிகளைக் கொண்டது. அது ஆமை வேகம் என்றால் இது புலிப்பாய்ச்சல்.

அந்த டிசம்பர் மாதக் குளிரில் நடுங்கியபடி, கடவுளுக்கு நான் எழுதிய அந்தக் கடிதத்திற்கு எனக்கு இவ்வளவு அழகான பதில் கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.

கடவுள் நேரிடையாக செயலாற்றுவதில்லை.

தாம் தேர்ந்தெடுத்த சில நல்ல மனிதர்களின் மூலமாகவே அவர் செயல்படுகிறார் என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது.

அவரது செயல்களைச் செய்பவர்கள் அவராகவே மாறிவிடுகிறார்கள்.

இதை வெறுமனே ஒரு எலக்ட்ரானிக் பொருளாக என்னால் பார்க்க முடியவில்லை.

என் துன்பத்தைத் தங்களின் துன்பமாக உணர்ந்து….
நான் நலமாய் இருக்க வேண்டும் என மனதார விரும்பி….
பிரார்த்தனையோடு தங்களின் வியர்வைத்துளியையும் சேர்த்து….
மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு….
உருவாக்கப்பட்ட உயிருள்ள ஒரு ஜீவனாக இந்த மடிக்கணினியைப் பார்க்கிறேன்.

இத்தனைக்கும் இதற்காக உதவியவர்கள் எவரும் ஏதோ மாபெரும் கோடீஸ்வரர்களோ
வசதிகளில் புரள்பவர்களோ அல்ல.

அத்தனை பேருமே என் போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

அதனால்தானோ என்னவோ என் வலியையும் வேதனையையும் அவர்களால் முழுமையாக உணர முடிந்திருக்கிறதென நம்புகிறேன்.

நான் இதைத் திறந்து வேலை செய்யும்போதெல்லாம்,
இதற்கு உதவின, உதவ நினைத்த் அத்தனை அன்பு ஆத்மாக்களும்…
மனதளவில் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன்.

நான் தனியன் இல்லை எனக்காகவும் கவலைப்பட இத்தனை ஜீவன்கள் இருக்கிறார்கள் என்கிற உணர்வே ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொடுக்கிறது.

அனைவருக்கும் என்னுடைய கண்ணீர் கலந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

எல்லாம் வல்ல இறை சக்தி அனைவருக்கும் நீண்ட ஆயுளையும், விரும்பியதனைத்தையும் இடைவிடாது வழங்க மனமுருகிப் பிரார்த்திக்கிறேன்.

எவரஸ்ட்டின் உச்சிக்கு ஏறி இப்படி கத்த வேண்டும் போலத் தோன்றுகிறது.

நான் அதிர்ஷ்டக்காரன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Regards
Anthony Muthu.

Saturday, March 15, 2008

427. ஆனந்தவிகடனில் அந்தோணி முத்து

அன்புக்குரிய சகோதரர் அந்தோணி முத்து அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தமிழ் வலையுலக நண்பர்களிடம் உதவி வேண்டி ஒரு வேண்டுகோள் பதிவு இட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக, பல நல்ல உள்ளங்கள் பொருளுதவி செய்துள்ளனர். இது வரை சேர்ந்துள்ள தொகையை வைத்து அந்தோணிக்கு ஒரு மடிக்கணினி (அவர் விரும்பிய configuration-இல்) வாங்கித் தர உத்தேசம். அதன் வாயிலாக கணினி சார்ந்த வேலை ஏதாவது செய்து சிறிய அளவில் பணம் ஈட்ட முடியும் என்று அந்தோணி உறுதியாக நம்புகிறார். உதவிய / வாழ்த்திய நண்பர்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அந்தோணியின் மற்றொரு முக்கியத் தேவையான (பாட்டரியால் இயங்கும்) சக்கர நாற்காலியின் விலை கிட்டத்தட்ட 60000 ரூபாய். அதற்கும் பொருளுதவி தேவைப்படுகிறது. உங்களால் இயன்றதைச் செய்யலாம். சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா ? உதவ விரும்பும் நண்பர்கள் தங்கள் மின்மடலை பின்னூட்டத்தில் தெரிவித்தால், (பணம் அனுப்பத் தேவையான) என் வங்கிக் கணக்கு விவரங்களை மின்மடலில் அனுப்புகிறேன். நிற்க.

19.3.2008 தேதியிட்ட ஆனந்தவிகடனில், அந்தோணி பற்றிய கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது. அவரது அசாத்திய தன்னம்பிக்கை அதில் மிளிர்வதைக் காண முடிகிறது. அந்தோணியின் சமீபத்திய பதிவையும் வாசிக்கவும்.

ஸ்கேன் செய்யப்பட்ட, ஆ.வி.யில் வந்த கட்டுரை கீழே:






என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: ஆனந்தவிகடன்

Saturday, January 19, 2008

413. அந்தோணிக்கு உதவி வேண்டி

அன்பு நண்பர்களே,

சமூக உதவி சார்ந்த விதயங்களில் மிகுந்த அக்கறை உடைய சிங்கை அன்பு அந்தோணி என்ற இளைஞருக்கு உதவுவது குறித்து அனுப்பிய மின்மடலில், ஏற்கனவே மதுமிதா தனது நட்சத்திர வாரத்தில் எழுதிய பதிவின் சுட்டியை அளித்து, அந்தோணிக்கு நாம் கூட்டாகச் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் முன் வைத்தார்.
**************************
From Madhumithaa's posting:
இசைதான் வாழ்க்கை என்று இசையைக் கற்ற அக்குழந்தை பாதியில் படிப்பை நிறுத்திய சோகத்திற்கு காரணம், வாழ்ந்தே ஆகவேண்டுமே என்ற தீராவிருப்பே.

பி.ஏ இசை இரண்டாம் வருடம் முடித்துவிட்டு மூன்றாம் வருடம் செல்ல இயலவில்லை.மூன்று வருட திரையிசை முயற்சிக்குப் பிறகு இசையை விட்டு விட்டு, கணினியில் ஏதேனும் வேலை செய்ய வேண்டும். யாரையும் சார்ந்திருக்காது தன் உழைப்பில் வாழ வேண்டும் என்பது இவரின் விருப்பம்.

இதில் என்ன விஷயம் இருக்கிறதென்று பார்க்கிறீர்களா?இதுதான் விஷயமே. மனம் தளராத ஊக்கம் குறையாத இக்குழந்தை வசிப்பது ரெட்ஹில்ஸில்.

அப்போது அக்குழந்தைக்கு வயது 11. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தவறி ஒரு கிணற்றில் விழ நேர்ந்த விபத்தில், கழுத்துக்குக் கீழே எந்த உணர்வும் இல்லை. குழந்தையைப் பார்ப்பது போன்றே இவரைக் கவனிக்க வேண்டும். கைகள் மட்டும் உணர்வுடன் செயல்படும். கைகளும் மூளையும் போதும் என்கிறார் தான் உழைப்பதற்கு.

பரிதாபத்தையோ, அனுதாபத்தையோ இவர் எதிர்பார்க்கவில்லை. அன்பையும் நட்பையும் போற்றும் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் அன்புக் குழந்தை. உழைப்பின் மதிப்பறிந்த இக்குழந்தையை வாழ்த்துவோம். உரியதை அளிப்போம்.
********************************************

இம்முயற்சிக்கு அன்பு தன் பங்காக ரூ 10000 அனுப்பியும் உள்ளார். அவர் தந்த ஊக்கமும், எனது முந்தைய சமூக உதவி முயற்சிகளுக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவும் தான், இந்த பதிவின் வாயிலாக இந்த வேண்டுகோளை உங்கள் முன் வைக்கத் தூண்டுதலாக அமைந்தது.

புதிய பதிவர்களுக்கு ஒரு தகவல்: இது வரை கௌசல்யா என்ற ஏழை மருத்துவ மாணவியின் படிப்புக்கும், இன்னும் சில கல்வி சார்ந்த விதயங்களுக்கும் உங்கள் ஆதரவோடு, உதவி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், நான்கு பெண் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கும், அலெக்ஸாண்டர் என்ற ஆதரவற்ற முதியவரின் கண் மருத்துவ சிகிச்சைக்கும் நீங்கள் செய்த பொருளுதவியின் வாயிலாக, அக்குழந்தைகளும், முதியவரும் குணமடைந்து நலமாக உள்ளனர் என்பதை இங்கே குறிப்பிட விழைகிறேன்.

பார்க்க: நண்பர்களுடன் சமூக சேவை

********************************
அந்தோணி தன்னைப் பற்றி:

பல முறை இந்த வாழ்க்கை என்னை சந்தோஷப் படுத்தியிருக்கிறது.
அதற்குச் சமமாக துக்கப்படுத்தியும் இருக்கிறது. (நாணயத்தின் இரு பக்கங்கள்...?)

ஒரு உண்மயை இங்கே விளம்பியாகவேண்டியது கட்டாயம்.

என்னதான் Positive Anthony என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும்... துயரமும் துன்பமும் என்னை வாட்டும்போது பலமுறை (எண்ணிக்கை நினைவில்லை) நானும், தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன்.

கொடூரமான மனவேதனைகளை அனுபவித்திருக்கிறேன்.
மனதின் வலி தாங்காமல்....
இரவுகளில் வெடித்து அழுதிருக்கிறேன்.

"இறைவா! இந்த நொடியே என்னை எடுத்துக்கொள்," என்று
புழுவாய்த் துடித்துக் கெஞ்சியிருக்கிறேன்.

என் தந்தை அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வார்.

"சின்னதொரே...! ராஜா...!," "நாங்க (பெற்றோர்) இருக்கும்போதே கடவுள் உன்னை எடுத்துக்கணும்னு வேண்டிக்கடா...!"

அவர் சொல்வது எந்த அளவு சத்தியம், நிதர்சனம், என்பதை அவர் இருக்கும்போதே எனக்கு வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது.

ஊனமுற்ற தன் மகனுக்கு, உணவிடுவதைத் தவிர, உடலளவிலோ, வேறு வசதிகளோ... எதுவுமே செய்ய இயலாத ஒரு வயதான தகப்பனாக...
அவர்...

தான் அழுவதைக்கூட மறைக்கப் பார்ப்பார். (வேறு பக்கம் திரும்பிக் கொள்வார். உடல் குலுங்கும். கண்களில் மெளனமாய் வான் மழை வழிந்தோடும்.)

28-6-2007 விதி என் வாழ்வின் சூரியனை விழுங்கிய நாள்.

என் தந்தை இறைவனடி சேர்ந்தார்.

இன்னமும் அந்த அதிர்ச்சியில்... இழப்பில்... இருந்து என்னால் வெளிவர முடியவில்லை.

என்னடா இவன் Positive Anthony என்று பெயர் வைத்துக் கொண்டு,
இப்படி அநியாயத்துக்கு அழுதுத் தொலைக்கிறானே, என்று நீங்கள் நினைக்கலாம்.

இல்லை!

நான் என்ன தெய்வப் பிறவியா?

எதற்கும் அசைய மாட்டேன் என்று சொல்வதற்கு.

"சாத்வீகனன்றோ நான்?,
சொல்லடி என் சக்தி...?"
என்றுக் கதறத் தோன்றுகிறது.

எத்தனை துன்பங்களைச் சந்தித்திருந்தாலும்....
இப்போது...
நான் மிக, மிக சந்தோஷமாக இருக்கிறேன்.

இயற்கை என்னும் அந்த மகா சக்தி (கடவுள்), ஒரு கதவை மூடினால், மற்றொரு கதவைத் தயாராகத் திறந்து வைத்திருக்குமாம்.

ஆம். இது நிஜம்.

என் கழுத்துக்கு கீழ் முடக்கப்பட்ட சக்தி முழுவதும்...
என் தலையில்(மூளையில்)...,
கைகளில் மாற்றப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

*****************************************

தனது வாழ்க்கையை நம்பிக்கையுடனும், தெம்புடனும் எதிர்கொண்டிருக்கும் அந்தோணிக்கு தற்போது மிகவும் அவசியமானவை, ஒரு நல்ல மெத்தையும், ஒரு மடிக்கணினியும், ஒரு சக்கர நாற்காலியும். நாம் கூட்டாகச் செய்யும் பொருளுதவி மூலம், இம்மூன்றையும் அவருக்கு வாங்கித் தர முடியுமானால், அவருக்கு அது பெரிய உதவியாக அமையும்.

அந்தோணிக்கு உதவ விரும்பும் நண்பர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் அளித்தால், பணம் அனுப்புவதற்குத் தேவையான வங்கி விவரங்களை அனுப்புகிறேன். எனது மின்னஞ்சல்: balaji_ammu@yahoo.com
முந்தைய உதவி முயற்சிகளில் பங்கேற்ற நண்பர்கள் வசம், எனது வங்கிக் கணக்கு விவரங்கள் இருக்கும்.

அந்தோணிக்கு நேரடியாக உதவ விரும்பினால், அவரது வலைப்பதிவில் அவரைப் பற்றிய தகவல்களும், தேவையான விவரங்களும் உள்ளன. சில விவரங்களை கீழ்க் காணவும்.

Address:
S. Anthony Muthu,
C/o J. Dharmaraj, 5/96 Cheran street, K.K.Nagar, Pammadhukullam, Redhills, Chennai-52, Tamilnadu, India
Pin Code No: 600052

Tele: 26323185,
Mobile No: 09444496600,
E.mails:
anthonymuthu1983@yahoo.com
anthonymuthu1983@gmail.com

J. Dharmaraj
Indian bank/ Chennai/ Redhills Branch.
Old Account No.32318
New Account No. 46929660-7


இம்முயற்சிக்கு உங்களால் இயன்ற ஆதரவு தருமாறு பணிவான வேண்டுகோளுடன்

எ.அ.பாலா

Sunday, December 09, 2007

Star25. நண்பனைக் காப்பாற்றுங்கள்

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
***********************************
நண்பர் நிலவு நண்பனின் வேண்டுகோளின் பேரில் அவர் பதிவை இங்கே மீள் பிரசுரம் செய்கிறேன். கவனத்திற்கு கொண்டு வந்த அவருக்கு என் நன்றி.
****************


SAVE MY FRIEND

Mr. Raj Mohamed young guy, he's previously working here (s'pore) under work permit. Now he come under travel visa for propose him Employment pass. Unfortunately he feels not well. Now he's under coma stage in NUH CHANGI HOSPITAL . Every day want to pay the hospital more money. Doctor said now can't carry to India. Because him body condition not well to ply. Right now we can't able to arrange much money. Please to share your contribution, what ever you can share its S$10.00 also valuable for us. And also please forward this mail too globally and sms to your Singapore friend circle .

Human being pleases to call:

Mr.Pirabhu: +65 81477688

Pandiidurai:+65 82377006



You can top up the money to following bank account also: posb A/c No: 039-64076-7

After remit your valuable contribution please to message the above contact no


Thanks

Friendly

Pandiidurai


உயிர் காக்க உதவுங்கள ்

என் நண்பரின் நண்பர் எதிர்பாரதவிதமாக உடல்நலகுறைவு ஏற்பட்டு NUH CHANGI மருத்துவமனையில் இருக்கிறார் . இந்தியாவிற்கு அவரை அழைத்துசெல்லும்அளவு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று டாக்டர் கூறிவிட்டனர் . முன்பு அவர் வேலை செய்யும் உரிமத்தில் இங்கு பணிபுரிந்தவர் . தற்பொழுது அவர் தனது டிரவலிங் விசாவில் employment pass-i துரிதப்படுத்த வந்துள்ள இவ்வேளையில் இத்தகு துயரம் ஏற்பட்டதாலே உதவும் கரங்களை நோக்கி நாங்கள் வந்துள்ளோம். எங்களால் இயன்ற அளவு உதவிகளை செய்துவருகிறோம் ஆனால் தினமும் அதிகரிக்கும் மருத்துவசெலவினால் கருணையுள்ளம் கொண்ட உதவும் கரம் உங்களை தேடிவருகிறோம். 7000 வெள்ளிக்கும் மேல் மருத்துவசெலவிற்கு தேவைபடுகிறது . உங்களால் இயன்ற 10 வெள்ளியாக இருந்தாலும் உதவுங்கள். இந்த மடலினை உலகம் தழுவிய நண்பர்களுக்கு அனுப்புங்கள். குறுஞ்செய்தியாக உங்கள் செல்பேசிவழி உங்களின் சிங்கப்பூர் நண்பர்களுக்கு அனுப்புங்கள்

மனிதநேயமிக்கவர்கள் தொடர்பு கொள்ள

பிரபு: +65 81477688
பாண்டித்துரை: +65 82377006


உங்களின் உதவியை நேரடியாக வங்கியில் செலுத்த: posb A/c No: 039-64076-7

நம்பிக்கையுடன்
பாண்டித்துரை

- ரசிகவ் ஞானியார்

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Sunday, September 30, 2007

குழந்தை லோகபிரியா நலமாய் - நன்றியுடன்

அன்பான நண்பர்களே,

டிசம்பர் 31 2006 அன்று குழந்தை லோகபிரியாவிற்கு இருதய அறுவை சிகிச்சைக்காக வந்த வேண்டுகோள் பற்றி இந்தப்பதிவுவாயிலாக வெளியிட்டிருந்தேன்

வலையுலகு மற்றும் மற்ற நண்பர்கள், ஆர்வலர்களது உதவியுடனும், நல்லாசிகளுடனும் குழந்தை லோகபிரியா இருதய அறுவை சிகிச்சை 24/01/2007 அன்று நல்ல படியாக நடந்து முடிந்தது பற்றி இந்தப் பதிவில் எழுதியிருந்தேன்.

நேற்று நண்பர் சங்கரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.அது அப்படியே உங்கள் பார்வைக்கு.

*****************************************************************************

அன்புள்ள பாலாஜி

நொம்ப நாட்களாக ஃபோனிலும், தெரிந்தவர் மூலமாகவும், இருதய அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை லோகப்பிரியா நலம் பற்றி விசாரித்து அறிந்து கொண்டிருந்தோமல்லவா.. அதன் தொடர்ச்சியாக

நேற்று குழந்தை லோகப்ரியாவை அழைத்துக் கொண்டு அவரது தாயார் என் வீட்டிற்கு வந்திருந்தார்.

"ஆபரேஷன் முடிந்து 8 மாதங்களாகி விட்டது. அவ்வப்போது குழந்தைகளுக்கே உண்டான சிறு காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற சிறு சிறு உபாதைகள் தவிர குழந்தை நல்லபடியாக இருக்கிறாள்.ரெகுலராக ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு செக் அப்பிற்கு போய் வருவதாகவும் டாக்டர்கள் குழந்தை நார்மலாக இருக்கிறாள் , இனி ஒரு கவலையும் இல்லை. என்று தெரிவித்ததாகவும் சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.


குழந்தை 15.01.2007 அன்று தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியதாகவும், இப்போது அவளது தந்தை கவலையற்று தினம் வேலைக்கு செல்வதாகவும், தான் இன்னும் ஒரு 6 மாதம் பார்த்து விட்டு , பின் ஏதாவது வீட்டு வேலைக்கு போகலாம் என்று இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

லோகபிரியாவின் வாழ்வில் விளக்கெற்றி வைத்து தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி சொல்லும்படி கண்களில் நன்றி ததும்ப திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்.


குழந்தை நல்ல துறு துறுப்பாக ஓடியாடி விளையாடுகிறது...ஆபரேஷன் மற்றும் மருந்து மாத்திரைகளால் கொஞ்சம் பூஞ்சையாக இருக்கிறது.ஆனால் நாளாவட்டத்தில் தேறி விடும் என்று நினைக்கிறேன்.


நண்பர்களுடன் சேர்ந்து செய்த ஒரு நன்முயற்சியின் வெற்றியும் பலனும் கண் முன்னே கண்ட போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என் சார்பாகவும் , வலையுலக நண்பர்கள் சார்பாகவும் குழந்தைக்கு வாழ்த்து சொல்லி, பிறந்த நாள் பரிசும் கொடுத்தனுப்பினேன். இந்தச் சமயத்தில் உதவி செய்த நமது வலையுலக நண்பர்கள அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.


இதை நானே வலை பதியலாம் என்று நினைத்தேன்..ஆனால் உன் வலைப் பதிவில் போட்டால் தொடர்ச்சி இருக்கும் என்பதால் உனக்கு அனுப்பியுள்ளேன்.


Bala..a great job..well done..Thanks to one and all.

அன்புடன்...ச.சங்கர்


****************************************************************************

இதைப் பதிவதுடன் இந்த நேரத்தில், உதவிய நண்பர்களுக்கும், குழந்தை லோகபிரியா குணமடைய வாழ்த்திய / பிரார்த்தித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா


***365***

Monday, April 30, 2007

341. மருத்துவ மாணவி கௌசல்யாவுடன் சந்திப்பு

அன்பு நண்பர்களே,

சிரமம் பார்க்காமல், எனது இப்பதிவை வாசித்து விடும்படி ஒரு வேண்டுகோளுடன்,

கௌசல்யாவின் மருத்துவப் படிப்புக்கு வேண்டி, உங்களிடம் பொருளுதவி பெற்று, அதை அவருக்கு வழங்கியது குறித்த என் பதிவை வாசித்திருப்பீர்கள்.  அவர் இப்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறார். சமயம் கிடைக்கும்போது, அவரை சந்தித்து பேசி வருகிறேன். நன்றாக படிக்குமாறு (உங்கள் சார்பில்) அறிவுரையும் தந்து வருகிறேன்!!!

கௌசல்யா ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற, ஒரு ஆங்கிலப் பயிற்சி மையத்தில் விசாரித்து, அவரை ஒரு தபால் வழி பயிற்சிப் படிப்பில் சேர்த்து விட்டிருக்கிறேன். நான் அறிந்தவரை, முதலில் பார்த்ததை விட தற்போது கௌசல்யாவின் நடை உடை பாவனைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது, மன உறுதியும், தன்னம்பிக்கையும் கூடியிருப்பதாகத் தோன்றியது.

பத்து நாட்கள் முன்பு, கௌசல்யாவின் அழைப்பின் பேரில் அவரது ஸ்டான்லி மருத்துவ விடுதியின், 'ஹாஸ்டல் டே' விழாவுக்கு என் மகளுடன் சென்றிருந்தேன்.  பிற மாணவிகள் தமதமது பெற்றோரை அவ்விழாவுக்கு அழைத்திருப்பதாக, கௌசல்யா கூறியிருந்தார். அதனால், கௌசல்யாவின் (உங்கள் சார்பு) ரெப்ரெசண்டேடிவ் ஆக நான் நிச்சயம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து, அதன்படி (முக்கியமான சமயங்களில் என்னை சங்கடப்படுத்தும் ஒற்றைத்  தலைவலி படுத்தியபோதும்:)) விழாவுக்குச் சென்றேன். கௌசல்யாவுக்கு மிக்க மகிழ்ச்சி.

விழாவுக்கு அமைச்சர் பூங்கோதையும், நடிகர்கள் ஸ்ரீகாந்தும், பசுபதியும் வருகை தந்தனர்.  ஏற்கனவே நடந்து முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. வருங்கால மருத்துவர்கள் சிறப்பாக நடனமாடினர் :)  டின்னரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  விழா முடியும் வரை நாங்கள் இருந்தது குறித்து, கௌசல்யாவுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி, என் மகளிடமும் மிகுந்த அன்பு காட்டினார்.  தலைவலியை சமாளிப்பது அவ்வளவு கடினமான விஷயமாகத் தோன்றவில்லை!!!

 'கௌசல்யா' நிதி குறித்த வரவு/செலவு கணக்கு விவரங்களை, பொருளுதவி செய்த நண்பர்களுக்கு மடல் வழி அனுப்பி விட்டேன்.  இவ்வருடம், கௌசல்யா தவிர இன்னும் 3 மாணவ/மாணவிகளுக்கு உதவ உத்தேசம். கல்வி உதவி கேட்டு சில கோரிக்கைகள் வந்துள்ளன. அவை குறித்து விசாரித்து, அவர்கள் படிப்பு மற்றும் குடும்ப சூழலை கணக்கில் கொண்டு, உங்களுக்கு தகவல் அளித்து, பின் உங்கள் சம்மதத்துடன்/அனுமதியுடன், அவர்களுக்கு உதவுவதே என் விருப்பமும், ராம்கியின் விருப்பமும்.

இந்த வருட முடிவில், உங்களிடம் மீண்டும் உதவி கேட்டு என் வேண்டுகோளை முன் வைக்க உத்தேசம்.  எப்போதும் போல உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்சமயம் நிதி கைவசம் உள்ளது.

மீண்டும் உதவி செய்த நண்பர்களுக்கும், கௌசல்யா வாழ்வில் முன்னேற வாழ்த்தும் நெஞ்சங்களுக்கும் உளமார நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 341 ***

Wednesday, April 25, 2007

336. அலெக்ஸாண்டரின் ஒரு கண்ணின் பார்வை மீண்டது

அன்பு நண்பர்களே,

எனது
இந்தப் பதிவில் அலெக்ஸாண்டர் என்ற பெரியவரின் காடராக்ட் சிகிச்சைக்காக பொருளுதவி கேட்டு வேண்டுகோள் வைத்திருந்தேன். எனது அலுவலக நண்பர்களிடம் சேகரித்தும், மற்றும் என்னிடம் இருந்த மருத்துவ நிதியிலிருந்து கொஞ்சம் எடுத்தும், ரூ.8000-ஐ அவரது லேசர் சிகிச்சைக்காக, CHILD என்ற தொண்டு நிறுவனம் மூலம் வழங்கினேன்.

இன்று அலெக்ஸாண்டர் என்னிடம் தொலைபேசினார். வலது கண்ணில் லேசர் சிகிச்சை மூலம் காடராக்ட் அகற்றப்பட்டதாகவும், கண் பார்வை பெருமளவு மீண்டு விட்டதாகவும் சொன்னார், தன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாம் செய்த உதவி பலனளிக்கும்போது தான், அதற்கு ஓர் அர்த்தம் ஏற்படுகிறது அல்லவா ?

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு! அலெக்ஸாண்டரின் இடது கண்ணிலும் காடராக்ட் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. மருத்துவமனையில் அலெக்ஸாண்டரின் நிலைமை குறித்து எடுத்துக் கூறியதன் விளைவாக, முதலில் கேட்ட தொகையிலிருந்து (ரூ.22000) ஒரு 7000 ரூபாய் குறைக்க முடிந்தது. அதாவது, 15000 ருபாய்க்கு சிகிச்சை செய்ய மருத்துவமனை ஒப்புக் கொண்டுள்ளது.

அதில், கிட்டத்தட்ட 5000 ரூபாய் சேகரித்து விட்டேன். உங்களால் இயன்ற தொகையை (அது எவ்வளவு சிறியதாக இருப்பினும்) தந்து அந்த ஆதரவற்ற முதியவருக்கு உதவுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். என் (மற்றும் ராம்கியின்) வங்கிக் கணக்கு விவரங்களை, தனி மடலில், உதவ விரும்பும் நண்பர்களுக்கு தருகிறேன்.

balaji_ammu@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும். விவரங்கள் தருகிறேன்.

நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 336 ***

Wednesday, April 18, 2007

334. அலெக்ஸாண்டரின் கண் பார்வைக்கு உதவி வேண்டி

அன்பு நண்பர்களே,

இப்பதிவை சிரமம் பார்க்காமல், முழுவதும் வாசித்து விடுமாறு ஒரு விண்ணப்பத்துடன்,

இரு தினங்களுக்கு முன், மெயில் வழி, ஒரு ஆதரவற்ற முதியவரின் காடராக்ட் அறுவை சிகிச்சைக்கு பொருளுதவி வேண்டி ஒரு விண்ணப்பம் வந்தது. அந்த மடலின் சாராம்சம் இது தான்!

அலெக்ஸாண்டர் என்ற 69 வயது பெரியவர் ஒரு முதியவர்களுக்கான இல்லத்தில் முதலில் வாழ்ந்து வந்தார். அவருக்கென்று உறவினர் யாரும் இல்லாத சூழலில், அந்த இல்லம் மூடப்பட்டு, பெங்களூருக்கு இடம் பெயர்ந்ததால், அவருக்கு bronchitis நோய் இருப்பதால், பெங்களூர் செல்ல முடியவில்லை. சென்னையிலேயே, அவரது நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி, ஆங்கில டியூஷன் எடுத்து, வெளியில் சாப்பிட்டு, கஷ்ட ஜீவனம் நடத்தி வருவதாக, அவர் கூற கேட்டறிந்தேன்.

அவரது இரு கண்களிலும் காடராக்ட் ஏற்பட்டு, பார்வை மங்கி வருகிறது. CHILD என்னும் சமூக சேவை நிறுவனம், அவரது அறுவை சிகிச்சைக்கான நிதி உதவியை சேகரிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது. அதை செந்தில் என்பவர் நடத்தி வருகிறார்.

செந்தில், CHILD பற்றி:
----------------------------------
இவருடன் பேசினேன். இவர் KMC-யில் HIV கவுன்சிலராக பணியாற்றிக் கொண்டே, இந்த சேவை அமைப்பையும் நடத்தி வருகிறார். கிடைக்கும் பொருளுதவி போதாமல், தனது சம்பளத்தின் பெரும்பகுதியையும், கொரட்டூரில் உள்ள CHILD இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 9 (HIV-யால் பாதிக்கப்பட்ட) குழந்தைகளுக்காக செலவழித்து வருகிறார். சமூக சேவையை வெளியில் சொல்லாமல் செய்து வரும் செந்தில் மிக்க பாராட்டுக்குரியவர்! கொரட்டூரில் உள்ள இல்லத்துக்கு வந்து குழந்தைகளை சந்திக்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். நான் ஒரு முறை அங்கு சென்று வந்து, விரிவாக எழுதுகிறேன்.

இவரைப் போன்றவர்கள் சோர்வடையாமல் சேவை செய்ய உதவ வேண்டியது நமது கடமை என்று தோன்றுகிறது. அவரது கைத் தொலைபேசி எண் மற்றும் CHILD-இன் வங்கிக் கணக்கு எண்ணை தருகிறேன். நேரடியாக நீங்கள் அவருடன் பேசலாம், உதவலாம்! ரெ·பரன்ஸ¤க்கு என் பெயரை (பாலாஜி, எ.அ.பாலா அல்ல!) கூறுங்கள்.

Mobile No.: 98416-56103
Account Name: CHILD
ICICI SB A/C No.: 602001321353
Branch: Chennai Main branch


இப்போது அலெக்ஸாண்டருக்கு வருகிறேன். என், எனது அலுவல நண்பர்கள் வாயிலாக ஒரு 5000 ரூபாய் சேகரிக்க முடிந்தது. அத்துடன், லோகபிரியா என்னும் குழந்தையின் மருத்துவ உதவிக்கென்று நான் முன்னர் சேகரித்த தொகையில் உள்ள மீதியில் ரூ.3000 சேர்த்து, ரூ.8000-ஐ, அலெக்ஸாண்டரின் கண் அறுவை சிகிச்சைக்காக, செந்தில் அவர்களுக்கு இன்று அனுப்பினேன். தேவைப்பட்டால், முன்னர் பணம் அனுப்பிய நல்ல உள்ளங்களின் சம்மதத்தோடு, மீதித் தொகையிலிருந்து இன்னும் கொஞ்சம் பணம் அனுப்பலாம் என்று உத்தேசம்.

இரு கண்களுக்கும் சர்ஜரி செய்ய மொத்தம் 40000 ரூபாய் தேவைப்படுகிறது. இன்னும் கிட்டத்தட்ட 26000 ரூபாய் சேகரிக்க வேண்டியுள்ளது. உதவ விருப்பம் உள்ள நண்பர்கள் நேரடியாக செந்திலின் CHILD வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம். அனுப்பியவுடன் எனக்கு மெயில் வழி (balaji_ammu@yahoo.com) விவரங்களை (பெயர், அனுப்பிய தேதி, தொகை, transaction reference no. ...) அனுப்பினால், தொகை credit ஆனவுடன் உங்களுக்கு தகவல் தரவும், கணக்கு வழக்கு பார்க்கவும், வசதியாக இருக்கும். என் வங்கிக் கணக்குக்கு அனுப்பினாலும் பரவாயில்லை. நான் செந்திலிடம் பணத்தைச் சேர்ப்பித்து விடுகிறேன். என் வங்கிக் கணக்கு விவரங்களை, தனி மடலில், வேண்டும் நண்பர்களுக்கு தருகிறேன்.

Related Link

என்றென்றும் அன்புடன்
பாலா


*** 334 ***

Tuesday, March 13, 2007

308. குழந்தை பிரியதர்ஷினி நலம்

அன்பான நண்பர்களே,
குழந்தை பிரியதர்ஷினியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவித் தொகை திரட்ட வேண்டி, நான் இட்ட பதிவின் மற்றும் பொன்ஸ் இட்ட பதிவின் தொடர்ச்சியாக, பல வலையுலக நண்பர்கள் பொருளுதவி செய்தனர். நம் தமிழ் வலைப்பதிவாளர்கள் சார்பில், திரட்டிய உதவித்தொகையான ரூ.27,500-ஐ குழந்தையின் மருத்துவ உதவிக்கு வழங்கினோம். இம்முயற்சிக்கு ஆதரவு (உதவியும், பிரார்த்தித்தும்) தந்த நண்பர்களுக்கும், பொன்ஸ¤க்கும் நன்றிகள் பல. இந்த உதவி முயற்சியின்போது தான், மருத்துவமனையில் (Dr.Cherian's Heart Foundation) பொன்ஸையும், பாலபாரதியையும் முதன்முறையாக சந்திக்கும் பேறு கிட்டியது :)

இன்று பிரியதர்ஷினியை மூன்றாவது முறையாக சந்தித்தேன். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வாரம் ஆகி விட்டது. நன்றாக நலம் பெற்று வருவதாக அறிந்தேன். அறுவை சிகிச்சைக்கு முன் முகம், கழுத்து, கைகளில் (இதயத்தில் நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்து விடுவதால்) காணப்பட்ட நீலநிற திட்டுக்கள் முழுதும் மறைந்து, குழந்தை பளிச்சென்று இருக்கிறாள். அவள் தாய் தந்தையும் மிக்க மனநிறைவுடன் பேசினர்.

நடந்து முடிந்த அறுவை சிகிச்சை சற்று காம்பிளக்ஸ் வகைப்பட்டது என்று டாக்டர் கூறினார். இன்னும் ஒரு வருடம், செக்கப்புக்கு வேண்டி ஒரு மூன்று முறை அவள், கோயமுத்தூரிலிருந்து சென்னை வர வேண்டியிருக்கும். மறுபிறவிக்கு ஒப்பாக, மீண்டு வந்திருக்கும் பிரியதர்ஷினியை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவளது பெற்றோருக்கு இன்று அறிவுரை (லேசாகத் தான்!) வழங்கி கொண்டிருந்தபோது, குழந்தை கண்ணயர்ந்து விட்டாள். சரி தான் என்று விடை பெற்றுக் கொண்டேன் :) கோயமுத்தூர் வந்தால், தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்ற அவர்களது அன்பான அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.

நமது உதவித்தொகை தவிர, பிரியதர்ஷினிக்கு விப்ரோவிலிருந்தும், சில தொண்டு நிறுவனங்களிலிருந்தும் கிட்டத்தட்ட 1,20,000 ரூபாய் நிதியுதவி வந்திருந்தது. ஏதோ ஒரு விதத்தில், ஒரு நல்ல காரியத்தில், நம் பங்கை ஆற்றியிருக்கிறோம் என்ற அளவில், மனநிறைவும், மகிழ்ச்சியும் ! உதவிய நண்பர்களுக்கு மீண்டும் நன்றி. ஒத்துழைப்பு தந்த பொன்ஸ¤க்கும், பாலபாரதிக்கும் எல்லோர் சார்பிலும் வாழ்த்துக்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 308 ***

Thursday, February 22, 2007

300. உயிர் வாழ உதவி வேண்டி - 3

அன்பான நண்பர்களே,
சிரமம் பார்க்காமல் இந்தப் பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

சமீபத்தில் பதிவர் பொன்ஸ் (பூர்ணா) மருத்துவ உதவி கேட்டு வந்த ஒரு மின் மடலை எனக்கனுப்பி, குழந்தை லோகபிரியாவின் மருத்துவ உதவிக்கு (குழந்தை தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்று, நலம் பெற்று வருகிறாள்) வழங்கியது போக, மீதியுள்ள தொகையை (கிட்டத்தட்ட 22000) பிரியதர்ஷினி என்ற 3 வயதுக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு வழங்கலாமே என்று ஆலோசனை தந்திருந்தார்.

நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நேற்று அவரும், பதிவர் பாலபாரதியும் Dr. செரியன் ஹார்ட் ·பவுண்டேஷனில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பிரியதர்ஷினியின் பெற்றோரையும் சந்தித்து, விவரங்கள் கேட்டறிந்தனர். அவர்களுக்கு நன்றி. Disha Foundation என்ற தொண்டு நிறுவனம் உதவி செய்வதாக வாக்கு கொடுத்திருந்த போதிலும், சற்று அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில், குழந்தையின் தந்தை திரு.மூர்த்தி, மிகவும் அலைந்து, பலரிடம் கடனுதவி பெற்று (வீட்டையும் அடமானம் வைத்து) மருத்துவமனை முன் பணமாகக் கேட்ட 2 லட்சத்தை, 3 நாட்களுக்கு முன் கட்டி விட்டார்.

இன்று நான் மருத்துவமனைக்குச் சென்று, திரு.மூர்த்தியிடம் பேசினேன். அவர்கள் கோயமுத்தூர்காரர்கள். இந்த complicated சர்ஜரி செய்ய, அங்குள்ள (KG Hospital உள்ளிட்ட) பெரிய மருத்துவமனைகளும் இசையாததால், இவ்வளவு பணம் செலவழித்து, சென்னையில் (Dr.செரியன் போன்ற அனுபவம் வாய்ந்த நிபுணரிடம்) அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். திரு.மூர்த்தி ஒரு கம்பெனியில் செக்யூரிட்டியாக பணி புரிகிறார். சற்று சிரமமான குடும்பச் சூழல் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

மனிதர் (கோயமுத்தூருக்கே உரித்தான) நல்ல குணத்துடன் இருக்கிறார். ரூ 200000 புரட்ட தான் பட்ட சிரமங்களைக் கூட அவ்வளவாக பெரிதுபடுத்தவில்லை ! சென்னையில் தெரிந்தவர் / உறவினர் யாரும் இல்லாததால், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வேண்டிய நிலைமை.

குழந்தைக்கு இதயத்தில் ஒரு செயற்கை வால்வ் பொருத்த வேண்டியுள்ளது. அது தவிர, இதயத்தில் ஒரு ஓட்டையை அடைக்க வேண்டியுள்ளது. 5 மருத்துவர்கள் பங்கு கொள்ளும் அறுவை சிகிச்சை முடிய 8 மணி நேரம் ஆகும் என்று கேட்டறிந்தேன். இதயத்தில் கெட்ட இரத்தமும் நல்ல இரத்தமும் கலந்து விடுவதால், பிரியதர்ஷினியின் முகம் மற்றும் கைகள் சற்று நீலம் பாரித்திருந்தது. இம்மாதிரி பிரச்சினையால் பீடிக்கப்பட்ட குழந்தையை Blue Baby என்று கூறுவார்கள்.

இன்னும் ஒரு 55000-60000 தேவைப்படும் என்று கேள்விப்பட்டேன். லோகபிரியாவுக்காக நண்பர்கள் அனுப்பிய உதவித் தொகையில் ரூ.22000 கைவசம் உள்ளது. சென்ற உதவி முயற்சிகளில் பங்கு பெற விரும்பி இயலாத நண்பர்கள், இக்குழந்தையின் மருத்துவச் செலவுக்கு தங்களால் இயன்றதை தந்து உதவுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

உதவி செய்ய விரும்பும் நண்பர்கள், மடல் வழி தொடர்பு கொள்ளவும்.
poorna.rajaraman@gmail.com
balaji_ammu@yahoo.com
உதவுவதற்கான விவரங்களுக்கு, மேற்கூறிய இரண்டு முகவரிகளுக்கும் மடல் அனுப்பவும்.

Pons' posting: நீலக் குழந்தை..

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 300 ***

Saturday, January 27, 2007

288. குழந்தை லோகபிரியா நலம்

அன்பான நண்பர்களே,

சிரமம் பார்க்காமல் இந்த 'சற்றே நீண்ட' பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

லோகபிரியாவுக்கு ஜனவரி 24-ஆம் தேதி காலை இதய அறுவை சிகிச்சை, ராமச்சந்திரா மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ICU-வில் வைத்து கவனிக்கப்பட்டு வருகிறாள். மெல்ல நலமடைந்து வருகிறாள். இன்னும் 2-3 நாட்கள் ICU சிகிச்சை தொடரும் என்று டாக்டர் கூறினார். இன்று காலையில் கூட குழந்தையின் தந்தையுடன் பேசினேன். எல்லாம் நல்லவிதமாக முடிந்ததில் அவருக்கும் குடும்பத்தாருக்கும், மகிழ்ச்சியும் மனநிறைவும் என்பதை அவர் குரலிலேயே உணர முடிந்தது ! இன்னும் இரண்டொரு நாட்களில், நானும் சங்கரும் குழந்தையைப் பார்க்கப் போகிறோம்.

நமது வலைப்பதிவு நண்பர்கள் வாயிலாக 56,500 ரூபாய் உதவித்தொகையாக சேகரிக்க முடிந்தது. நமது நண்பர்களிடமிருந்து உதவி வரத் தொடங்குவதற்கு முன்பாகவே, ரூபாய் 50000 (விப்ரோவைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் மாருதிராவ் என்ற தெலுங்குப்பட தயாரிப்பாளர் வாயிலாக) மருத்துவமனையில் செலுத்தப்பட்டிருந்தது.

மொத்தத் தேவை ரூ. 1,25,000 என்று உதவி வேண்டி நான் இட்ட முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். அப்போது தான், ஒரு சந்தோஷமான திருப்பம் ஏற்பட்டது. இந்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது...நாம் (Sankar, Ramki) மற்றும் நம் வலையுலக நண்பர்கள் கிட்டத்தட்ட 56500/- வரை திரட்டி விட்ட நிலையில்....இன்ப அதிர்ச்சியாக சங்கர் வீட்டின் அருகில் இருக்கும் கமலா வேதம் எஜுகேஷனல் மற்றும் சேரிட்டி டிரஸ்ட் நடத்தும் டாக்டர்.ரவிசங்கர் வேதம் அவர்கள் டிரஸ்ட் மூலமாக ரூ.75000/- கான காசோலை அளித்துவிட்டார்.

ஆக, மொத்தத் தொகையும் (1,25,000) கிடைத்து மருத்துவமனையில் செலுத்தப்பட்டது ! நமது வலையுலக நண்பர்கள் அளித்த உதவித் தொகையை வைத்து என்ன செய்யலாம் என்பதற்கு அவர்களே ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னளவில் சிலவற்றைச் சொல்கிறேன். முடிவு உங்கள் விருப்பம்.

1. லோகபிரியாவின் பெயரில் வைப்புத் தொகையாக வங்கியில் கட்டி, அதன் வட்டியை குழந்தையின் தந்தை பெற்றுக் கொள்ளலாம்.

2. இன்னொரு உதவி முயற்சிக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

3. நீங்கள் அளித்த தொகையை திருப்பித் தந்து விடலாம்.


அடுத்து, செந்தழல் ரவி, மகாலஷ்மியின் கல்வி நிதியிலிருந்து (அதிகமாக இருந்த) ஒரு 20000 ரூபாயை எனக்கு அனுப்பினார். ரவி அனுப்பிய தொகையை (பின்னர் மற்றொரு உதவி முயற்சிக்குத் தேவைப்பட்டால் தரத் தயாராக இருப்பதாக எனக்கு எழுதியிருக்கும் ரவிக்கு நன்றிகள் பல !) அவருக்கு திருப்பி அனுப்பி விட்டேன்.

லோகபிரியாவின் மருத்துவ உதவிக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த முயற்சிகளில் லோகபிரியாவின் தந்தைக்கு நானும் என் நண்பன் சங்கரும் எங்களால் இயன்ற அளவில் உதவி செய்தோம். அவை குறித்து விரிவாக ஒரு மெயில் எழுதி அனுப்புமாறு சங்கரிடம் கேட்டிருந்தேன். அம்மடலிலிருந்து தகவல்களைத் தருகிறேன். எங்களைத் தவிர, குழந்தையின் தந்தை எடுத்த முயற்சிகளில் சம்பந்தப்பட்ட பலரும் எத்தகைய நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்பதை எடுத்துச் சொல்வது, என் கடமையும் கூட ! இதை சங்கர் தன் மடலில் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" என்று சுவைபடக் கூறியிருந்தார் !!!

குழந்தை லோகப்ரியாவிற்காக செய்யப்பட்ட முயற்சிகள் மற்றும் அதன் விவரங்கள்:

1.முதல்வருக்கு மனு கொடுக்கப்பட்டது......முதல்வர் அலுவலகத்திலிருந்து எழும்பூர் குழந்தைகள் மருத்துவ மனையில் குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை இலவசமாக அளிக்க ஆவன செய்வதாக கூறி கடிதம் வந்தது....ஆனால் 5 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய போதிய வசதிகள் அங்கு இல்லாத காரணத்தால் அங்கு செய்ய முடியவில்லை

2.திரு.தொல்.திருமாவளவனை சந்தித்த போது அவர் தனக்கு தெரிந்த தலைமை மருத்துவரிடம் (எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை) தொலை பேசி ஆவன செய்ய வேண்டுகோள் விடுத்தார்.அவரும் முடிந்தது செய்வதாகவும் அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்த முயல்வதாகவும் உறுதியளித்தார்.

3. ரஜினி ரசிகர் ஒருவர் ரூ.10000 வழங்கினார்


4.பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் போட்டதற்கு அவர்கள் உடனே பதிலளித்து ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கடிதம் எழுதி அதில் மருத்துவ செலவில் பாதி அல்லது ரூ.50000/- இதில் எது குறைவோ அதை பிரதமர் நிதியிலிருந்து தர in principle ஒப்புதல் அளிப்பதாகவும் இந்தத்தொகையை அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தகுந்த ஆதாரம் மற்றும் பில்களுடன் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் எனவும் சொல்லியிருந்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிந்தான் இந்தப் பணம் வரும்...ஆனால் முழுப்பணம் கட்டினால்தான் சிகிச்சை செய்வோம் இந்தக் கடிதத்தின் அடிப்படையில் செய்யவோ தள்ளுபடி தரவோ இயலாது என்று கூறி விட்டனர்.

5.தலைமை மருத்துவர் திரு.ரஞ்சித் அவர்கள் 125000 வேண்டாம்... கிட்டத்தட்ட 100000 இருந்தாலே சிகிச்சை தருகிறோம் என அன்புடன் இயைந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

6.விப்ரோ நிருவனத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள் சேர்ந்து 40000/- காசோலை வழங்கியுள்ளனர்

7.வீட்டில் அறுகில் உள்ள தெலுங்கு பட இயக்குனர் தயாரிப்பாளர் திரு.மாருதி ராவ் அவர்களது வீட்டில் 10000/- அளித்தனர்

8.நாமும் சொந்தமாகவும் ,இணைய நண்பர்கள், வலையுலக நண்பர்கள் மூலம் எடுத்த முயற்சிகளும் வலையுலக நண்பர்கள் முழு முனைப்புடன் செய்த உதவிகளும், பேராதரவும் பற்றி அதிகம் எழுதவில்லை.

9. .சத்திய சாயி டிரஸ்டிற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு மருத்துவமனை பொது மேலாளர் திரு.ஸ்ரீகுமார் அவர்களிடமிருந்து சான்று கடிதம் பெற்று தந்தால் ரூ.30000/- வரை உதவி செய்வதாக பதில் கடிதம் வந்தது.

11.இது தவிர சினேகா என்ற அமைப்பினர் மற்றும் இன்போஸிஸ் நிருவனத்திலிருந்து ராஜதுரை என்கின்ற ஒரு நண்பர் முதலியோர் குழந்தையின் தந்தையை சந்தித்து பணம் மற்றும் உதவி தர முன் வந்ததாக தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னமே முழு தொகை சேர்ந்ததால் இவர்களது உதவி நன்றி கூறி மறுக்கப்பட்டது.

12. லோகபிரியாவின் தந்தை அருள் உதவி வேண்டி அலைந்த அலைச்சல்களை இங்கே நிச்சயம் குறிப்பிட வேண்டும் !


சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனை கணக்கில் மீதமுள்ள பணம் மற்றும் பிரதமர் நிதியிலிருந்து முயற்சித்து பெறப்போகும் பணமும் குழந்தை கணக்கில் ஆஸ்பத்திரியில் இருக்கும் என்றும் post operation care இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு செக்கப் எக்ஸிஜன்சி போன்றவற்றிற்கு உபயோகிக்கப்படும் என்றும் எந்த பணப்பட்டுவாடாவும் செய்யப்பட மாட்டாது என்பதும் நாம் கேட்டறிந்த விஷயங்கள்.

சின்னச் சின்ன செய்திகள்...ஆனாலும் குறிப்பிட வேண்டியவை

நடிகர் திரு.விக்ரம் அவர்களுக்கு உதவி கேட்டு அனுப்பப்பட்டவுடன் 2007 ஆரம்பத்தில் priority list-ல் குழந்தை லோகப்ரியாவின் பெயர் அவர்கள் உதவிப் பட்டியலில் இருந்தது. ஆனால் அதற்கு முன்னமே பணம் சேர்ந்து விட்டபடியால் அங்கிருந்து உதவி தேவையில்லாமல் போய் விட்டது. அப்பொழுது தெரிந்த மற்றும் ஆஸ்பத்திரியில் அறிந்த விஷயம் திரு.விக்ரம் அவர்கள் வருடம் முழுவதும் பல குழந்தைகளுக்கு இந்த மாதிரி அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வதோடல்லாமல் அவர் துணைவியாருடன் வந்து இந்த குழந்தைகளை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பார்த்து ஆறுதல் மற்றும் தைரியம் சொல்லி செல்வது வழக்கம் .
A real STAR...& Star family.

நாம் குழந்தை லோகப்ரியாவிற்கு உதவி செய்வது பற்றி பேசிக்கொண்டிருந்த போது முன்னர் உதவி பெற்ற குழந்தை ஸ்வேதாவின் தந்தை " சார்..நான் என் குழந்தைக்காக உதவி கேட்டலைந்த போது கிடைத்த தொடர்புகள் பற்றி விவரங்கள் தருகிறேன் மற்றும் நானும் அலைந்து திரிந்து உதவ உங்களுடன் வருகிறேன் என முகம் தெரியாத இன்னொரு குழந்தைக்காக புறப்பட்ட போது தெரிந்தது
Helping and Being Good also is Contagious

இந்தக் குழந்தை வசிக்கும் சேரியில் வசிக்கும் அனைத்து கூலி தொழிளாலர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் சேர்ந்து ஐந்தும் பத்துமாக 2000/- சேகரித்தளித்த போது தெரிந்தது...
Certainly they are not poor in their Heart

உதவிக்கடிதத்தை நகல் எடுக்கச் சென்ற இடத்தில் கடிதம் படித்த நகலக உரிமையாளர் பிரதமர் அலுவலகம் போன்ற இடங்களுக்கு மனு எழுதிக் கொடுத்ததோடல்லாமல் உதவிக்கடிதங்கள் மற்ற பிற ஆவணங்களை இலவசமாக நகலெடுத்து தந்ததோடல்லாமல் அனுப்ப உதவியும் செய்து...
You can also be charitable in your Business too...என்று நிருபித்துவிட்டார்

இதிலிருந்து தெரிவது......after all the world is not as bad as we may think :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 288 ***

Sunday, December 31, 2006

உயிர் வாழ உதவி வேண்டி - 2

அன்பான நண்பர்களே,

சிரமம் பார்க்காமல் இந்தப் பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

இரு மாதங்களுக்கு முன் குழந்தை ஸ்வேதாவின் மருத்துவ உதவிக்காக சிங்கை நண்பர் அன்பு, என் வலைப்பதிவு வாயிலாக முன் வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, பல நண்பர்கள் பொருளுதவி செய்தனர். கிட்டத்தட்ட 40000 ரூபாயை சேகரித்து, மருத்துவமனைக்கு அனுப்ப முடிந்தது.

பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/11/blog-post_04.html

ஸ்வேதாவுக்கு நல்ல விதமாக இதய அறுவை சிகிச்சையும் நடைபெற்று, தற்போது நலத்துடன் இருக்கிறாள்.

பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/12/blog-post_17.html

ஒரு வாரம் முன்பு, ஸ்வேதாவின் வீட்டுக்குச் சென்று அவளை பார்த்து விட்டு வந்தேன். சக வலைப்பதிவர்களான சங்கரையும், மதுமிதாவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்து குழந்தை நலம் பெற்றதில், அவள் பெற்றோருக்கு அளவில்லா மகிழ்ச்சியும், எங்களுக்கும் மிகுந்த மனநிறைவும் ! இனிமையான சந்திப்பும் கூட. ஸ்வேதா எங்களை டாக்டர்கள் என்று நினைத்து முதலில் மிரண்டு எங்கள் கிட்டேயே வர மறுத்தாள் ! பின், பயம் விலகி, சற்று சிரிக்கவும், கிளம்பும் சமயம் டாட்டாவும் காட்டினாள் :)

இரு வாரங்களுக்கு முன், நண்பர்கள் ரஜினி ராம்கி மற்றும் சங்கர் மூலமாக இன்னொரு பிஞ்சுக் குழந்தைக்கு (லோகப்பிரியா) மருத்துவ உதவி தேவைப்படுவதாக செய்தி வந்தது. ராம்கி தனது ரஜினி ரசிகர்கள் சங்கம் மூலம் 12000 ரூபாய் கலெக்ட் செய்துள்ளதாகக் கூறினார். சங்கர், லோகப்பிரியாவின் தந்தையை சந்தித்து விவரங்களைக் கேட்டு எனக்கு அனுப்பிய மடலையும், ராம்கியின் மடலையும், உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். குழந்தைக்கு ஒரு மாதத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

********************************
அன்புள்ள பாலாஜி

இதனுடன் குழந்தை லோகப்ரியாவின்(5 Month's old) மருத்துவ உதவிக்காக இருதய நிபுணர் டாக்டர் . M.S.ரஞ்சித் கொடுத்துள்ள கடிதத்தை இணைத்துள்ளேன்.

குழந்தை இப்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ளது. அங்கு தேவையான உபகரணங்கள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை ராமச்சந்திராவில் காட்டும் படி பரிந்துரைத்துள்ளனர்.
இம் குழந்தையின் தந்தை போன வார இறுதியில் என்னை வந்து சந்தித்தார்.
குழந்தை லோகப்ரியாவின் தந்தை திரு.அருள் மீன்பாடி வண்டி எனப்படும் ட்ரை சைக்கிள் ஓட்டுகிறார்.தாயார் ஒரு வீட்டில் வீடு பெறுக்கும் வேலை செய்கிறார்.இப்போது குழந்தையின் உடல்நிலை காரணமாக அதுவும் போக முடியவில்லை.

இவர்கள் வசிப்பது எனது வீட்டிற்கு அருகில் உள்ள குடிசைப் பகுதியில்
இவர்களது முதல் ஆண் குழந்தையும் 2 ஆண்டுகளுக்கு முன் இதே போல் இதய வியாதியால் இறந்து விட்டது..சரியான டையக்னாஸிஸ் மற்றும் சிகிச்சையின்றி...கொடுமை என்னவென்றால் என்ன வியாதி என்றே இவர்களிடம் சொல்லப் படவில்லை.ஹெரிடிடரி என்றும் விளக்கவில்லை...இது தெரியாத அறியாமையால் இரண்டாவது குழந்தையும் பெற்று அதுவும் அதே நோயால் அவதியுரும் நிலை எந்த பெற்றோருக்கும் வர வேண்டாம்அப்போதே சொல்லியிருந்தால் இரண்டாவதாக குழந்தை பெற்றே இருக்க மாட்டோம் என இப்போது கதறுகிறார்கள்.

அறியாமையால் உதவுவதற்கு யாருமின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கஷ்டப்பட்டு ரூ.20,000/- சேகரித்துள்ளனர்( அவர்கள் குடிசைப் பகுதியில் உள்ள அனைத்து கூலி வேலை/வீட்டு வேலை செய்யும் மக்கள் 50, 100 என உதவி செய்து இந்த தொகையை கொடுத்துள்ளனர்
எங்கள் தெருவில் உள்ள தெலுங்கு டைரக்டர்,தயாரிப்பாளர் மாருதி ராவ் ரூ.10,000/- உதவி செய்துள்ளார்

ஆக மொத்தம் ரூ 30,000/- சேர்ந்துள்ளது...மேலும் 100000 தேவை இதில் பெரும் பகுதி சேர்ந்து விட்டால் கூட அறுவை சிகிச்சை செய்து தர டாக்டர் சம்மதித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்காக ஜனவரி-27 என நாள் குறித்திருக்கிறது...இருந்தாலும் பணம் சேர்ந்து விட்டால் முன்னமே செய்து விடுவார்கள்.

அன்புடன்...ச.சங்கர்
*****************************

Here is one Medical Request. Baby. Loga Priya aged 3 months, admitted in Shri Ramachandra Hospital, Porur, suffering from Congenital Hear Disease and she has to undergo Open Heart SErgety which will cost around 1.25 lakhs and the same has to be done by January 2007. I've verified the same request and it's a genuine one, family is a lower middle class and father is a technician.

Name of the Patient : Baby. Loga Priya
Ref. No. 0951431
Consultant : Dr. M.S. Ranjit,
Professor Paediatric Cardilology,
Sri Ramachandra Hospital.
Contact No. 24768403 Ext. 450 & 464
E-Mail : ranjitmadathil@yahoo.com

* Any amount can be made but it should reach on or before 27.1.2007

Thanks & Regards,
Ramki
************************

தங்களால் இயன்ற உதவியை, அது எவ்வளவு சிறியதாக இருப்பினும், செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். உதவி செய்வதற்கு, கீழ்க்கண்ட மின் மடல் முகவரிகளில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

rajni_ramki@yahoo.com
sankar.saptharishi@gmail.com
balaji_ammu@yahoo.com

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 275 ***

Sunday, December 17, 2006

குழந்தை ஸ்வேதா நலம்

அன்புக்குரிய நண்பர் சிங்கை அன்பு அவர்கள் குழந்தை ஸ்வேதாவின் மருத்துவ உதவிக்கான முயற்சியை, எனது பதிவில் வெளியிட்ட ஒரு வேண்டுகோள் வாயிலாகத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வலையுலக நண்பர்கள், தகவல்கள் அளித்தும், பொருளுதவி செய்தும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ஸ்வேதாவின் இதய அறுவை சிகிச்சை ஒரு வாரம் முன்பு நல்லபடி நடந்து முடிந்தது. ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த ஸ்வேதா, தற்போது வீட்டுக்கு வந்து விட்டாள். அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் அவ்வப்போது சற்று வலியிருந்தாலும், குழந்தை ஸ்வேதா நலமாகவே இருக்கிறாள். ஒரிரு மாதத்தில் பூரண குணம் அடைந்து விடுவார் என்று டாக்டர் கூறியுள்ளார்.

நேற்று மருத்துவமனை சென்று குழந்தையைப் பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன், அதற்குள் ஸ்வேதா டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டுக்குச் சென்று விட்டாள். எனது உடல் நலமும் சற்று சரியில்லாத நிலையில், ஒரு 2-3 நாட்கள் கழித்து, ஸ்வேதாவை அவளது வீட்டிற்கே சென்று பார்க்கலாம் என்றிருக்கிறேன். இந்த நேரத்தில், உதவிய நண்பர்களுக்கும், ஸ்வேதா குணமடைய வாழ்த்திய / பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 270 ***

Saturday, November 18, 2006

மருத்துவ மாணவி கௌசல்யாவை சந்தித்தேன்

அன்பான வலைப்பதிவு நண்பர்களே,

இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!!
கௌசல்யாவுக்கு கல்வி உதவி குறித்த எனது முந்தைய பதிவு உங்கள் பார்வைக்கு:

முதற்கண், கௌசல்யாவின் கல்விக்கு உதவித் தொகை வழங்கிய நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு வழியாக, முதலாண்டு தேர்வு முடிந்து, ஒரு நீண்ட விடுமுறைக்குப் பின், தனது இரண்டாம் வருட மருத்துவப் படிப்பைத் தொடர, சொந்த ஊரான அந்தியூரிலிருந்து கௌசல்யா சென்ற வாரம் சென்னை வந்து சேர்ந்தார். கடந்த 2 மாதங்களில் பல முறை அவரிடம் தொலைபேசியிருக்கிறேன். சென்னை வந்தவுடன் என்னை தொடர்பு கொண்டார்.

இன்று ஸ்டான்லி கல்லூரி விடுதிக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசி விட்டு, நண்பர்களிடம் திரட்டிய கல்வி நிதியிலிருந்து அவருக்கு வேண்டிய உதவித் தொகையை அளிக்கலாம் என்ற முடிவுடன் எனது நண்பன் சங்கருடன் கிளம்பினேன். சென்ற வருடம் கௌசல்யாவை டெக்கான் குரோனிகள் அலுவலகத்தில் சந்திக்கச் சென்றபோது உடன் வந்த பெருமழை, இன்றும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது ! ஆனால், இது சிறுமழையே :)

கௌசல்யாவை சந்தித்துப் பேசினேன். சென்ற வருடம் பார்த்ததை விட, சற்று தைரியமாகத் தோன்றினார். ஒரு வருட நகர (விடுதி) வாழ்க்கை ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் வருடத் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் பற்றி வினவினேன். கூடப் படிக்கும் மாணவ/மாணவியர் பலரும் (இவரைப் போலவே) திறமைசாலிகள் என்பதால், competition தீவிரமாக இருப்பதாக அவர் கூறியது, பலரும் அறிந்தது தானே! பன்னிரெண்டாம் வகுப்பு வரை, ஒரு கிராமத்தில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற கௌசல்யா, முயற்சி எடுத்துப் படித்து, 70 மதிப்பெண்கள் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியது என்பது என் கருத்து. முதல் வருட மருத்துவப் படிப்பில் அவர் பயின்ற பாடங்கள், Anatomy, physiology மற்றும் Bio-chemistry ஆகியவை.

அவர் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற ஆவன செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவரது உயர் கல்விக்கு பல நல்ல உள்ளங்கள் மனமுவந்து உதவி செய்திருப்பதை எடுத்துக் கூறி, இரண்டாமாண்டில் இன்னும் சிறப்பாக படிக்க வேண்டும் என்று உங்கள் சார்பில் அறிவுரை கூறினேன் (நான் ஓர் அட்வைஸ் அண்ணாசாமி என்பது வேறு விஷயம்:)) மீண்டும், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல !

கௌசல்யா நன்றாகப் படித்து வாழ்வில் முன்னுக்கு வர வேண்டும், வருவார் என்ற திடமான நம்பிக்கையும் உள்ளது. அவ்வப்போது தாய் தந்தையற்ற அவரை சந்தித்துப் பேசி ஊக்கமளித்தலும் அவசியம் என்று தோன்றுகிறது, செய்வேன் ! கௌசல்யாவின் கல்விக்கு வேண்டி இந்த வருடம் திரட்டப்பட்ட மொத்த உதவித் தொகை 105559 (பழைய பாக்கியையும் சேர்த்து). வரவுக் கணக்கை, உதவி செய்த நண்பர்களூக்கு ஏற்கனவே மடல் வழி அனுப்பி விட்டேன். இந்த நேரம், தமிழ்மணத்திற்கும், திண்ணைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

உதவிய நண்பர்கள் விவரம் பின் வருமாறு:
செந்தில் குமரன், ஹரிஹரன், மஞ்சூர் ராசா, டோண்டு, கணேஷ் (சேலம்) alias S.V.Ganesh, H.ரங்கராஜன், குழலி, சந்தோஷ், துளசி, முகமூடி, மோகன் அண்ணாமலை, அபுல் அப்சல், ராமச்சந்திரன், ராஜா.ரங்கா, ஸ்ரீகாந்த் மீனாட்சி, வெட்டிப்பயல் என்கிற பாலாஜி.

இது தவிர, பொதுவில் பெயர் வெளியிட அனுமதிக்காத 12 நண்பர்கள் மற்றும் ஓர் இஸ்லாமியச் சகோதரர்.

ஒவ்வொரு ஆண்டும், கௌசல்யாவுக்கான டியூஷன் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி விடும். எனவே, விடுதிக்கான முழு ஆண்டு கட்டணமான ரூ.18000-க்கு (இத்தொகையிலிருந்து ஒவ்வொரு மாதத்திற்கான செலவை விடுதி நிர்வாகம் கழித்துக் கொள்ளும்) ஸ்டான்லி மாணவிகள் விடுதிக்கான வார்டன் பெயருக்கு ஒரு காசோலையும், கௌசல்யாவின் இதரச் செலவுகளுக்கு (புத்தகங்கள், உடை ...) அவர் பெயரில் ரூ.10000-க்கான காசோலையும் உங்கள் சார்பில் வழங்கினேன். "நீங்கள் கொடுத்ததே இந்த வருடத்திற்குப் போதுமானது சார்" என்று அப்பெண் மனநிறைவோடு கூறினாலும், ஏதேனும் தேவையிருந்தால் தயங்காமல் கேட்குமாறும், நன்றாகப் படிப்பது குறித்து மட்டும் யோசிக்குமாறும் கௌசல்யாவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

திரட்டிய தொகையில், வைப்பு நிதியாக (fixed deposit) வங்கியில் உள்ள ரூ.40000 மற்றும் கௌசல்யாவுக்கு அளித்த ரூ.28000 போக மீதமுள்ள தொகையில் இன்னும் சில ஏழை மாணவ/மாணவிகளுக்கு (இவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் நானும், ராம்கியும் சிலரைப் பற்றி விசாரித்து விட்டோம், இன்னும் சிலர் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது) உங்கள் அனுமதியுடன் உதவலாம் என்பது எங்கள் எண்ணம். நாம் கூட்டாக உதவி செய்த / செய்யப்போகிற மாணவ/மாணவிகளை ஊக்கப்படுத்தி அவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று உறுதி செய்வதும், உதவித் தொகையை உண்மையான தேவை இருப்பவர்களுக்கு பயன்படும் விதத்தில் செலவிடுவதும் எங்கள் கடமை என்று நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன். கல்விக்கு உதவும் இம்முயற்சிக்கு தொடர்ந்து நீங்கள் தரும் பேராதரவு தான், எனக்கும், விரைவில் சம்சார சாகரத்தில் நீந்த இருக்கும் 'ரஜினி' ராம்கிக்கும் மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும், மனநிறைவையும் தருகிறது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் உளமார நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

என்றென்றும் அன்புடன்
பாலா

***** 259 ******

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails